SSM&CO

ஒரு துணிப்பை 70 பாலீத்தின் கவர்களுக்கு சமம்,,

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கடலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் ஒரு லட்சத்து 78 ஆயிரம் டன் கடலும் ஓர் வீடுதான் பல கோடி உயிர்களுக்கு,,,,

One lakh 78 thousand tons of garbage is thrown into the sea in India every year and the sea is a home for millions of lives.

 

ஒரு துணிப்பை 70 பாலீத்தின் கவர்களுக்கு சமம்,,

One garment bag is equivalent to 70 polythene covers.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிகள் :
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன . இவைகள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் , மலிவாகவும் இருப்பதால் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர் . நெகிழிப் பைகள் , குவளைகள் , தட்டுகள் , உறிஞ்சும் குழல்கள் , தண்ணீர் பாக்கெட்டுகள் , கரண்டிகள் போன்றவை பயன்படுத்திவிட்டு அந்தந்த இடத்திலேயே கீழே போடப்பட்டு குப்பைகளாக கிடைக்கின்றன . இவைகள் கழிவு நீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி சுகாதார கேடு விளைவிக்கின்றன . நெகிழிகள் ஆங்காங்கே நிலத்தில் பரவிக் கிடப்பதால் மண்ணில் கலந்து மக்காமல் அப்படியே நீண்ட நாட்கள் இருக்கிறது .இதனால் மண்ணின் வளம் குறைந்து மழைபெய்தாலும் பூமிக்குள் மழைநீர் செல்லமுடிவதில்லை .எனவே நிலம் மற்றும் காற்று மாசுபாடு அடைகிறது .

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

One lakh 78 thousand tons of garbage is thrown into the sea in India every year and the sea is a home for millions of lives.

 

 

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கடலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் ஒரு லட்சத்து 78 ஆயிரம் டன் கடலும் ஓர் வீடுதான் பல கோடி உயிர்களுக்கு,,,,

 

 

நெகிழி மக்குவதற்கு ஆகும் காலம்

நெகிழிப் பைகள் (100-1000 ஆண்டுகள்)

நெகிழிப் பஞ்சுக் கழிவுகள் (1-5 மாதங்கள்)

காகிதம் (2-5 மாதங்கள்)

தோல் காலணி (25-40 ஆண்டுகள்)

அணையாடைகள் (500-800 ஆண்டுகள்)

மக்கள் பண்டைய காலங்களில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதையும் துணிப்பைகளில் தாம்பூலத்தை தருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். மட்பாண்டங்கள், பித்தளைப் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றையே தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்றவற்றுக்கு பயன்படுத்தினர். ஆனால்,தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகள், நெகிழி கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவங்களில் செயற்கையை நாடிச் செல்கின்றனர். ஆனால் நெகிழியால் உருவாக்கப் படும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை. அந்த பொருட்களை உணவு முறைகளில் நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்கின்றன. இதனால் புற்று நோய் உட்பட பல வியாதிகள் உருவாகின்றன. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது.

நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் நுளம்புகளால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது. நெகிழி உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவு பொருட்களால் உடலுக்கு பல ஊறுகள் விளைகின்றன. நெகிழிப் பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் ஏதுவாகிறது.

நெகிழிப் பயன்பாட்டை தடுப்பது எவ்வாறு ??
மாணவர்களும் இளைஞர்களும் நெகிழிப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் , நண்பர்கள் , அருகில் உள்ளவர்களிடம் கூறலாம் .
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளைத் தவிர்க்க அறிவுரை கூறலாம் . பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போது மறக்காமல் துணிப்பை எடுத்துச் செல்ல அறிவுறுத்த வேண்டும் .. . நெகிழியின் தீமைகளையும் ஏற்படும் நோய்களையும் விளக்கிக் கூறவேண்டும் .

பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்……பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா ???

நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது. இது கூடுதல் தீமையை தான் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலமோ 100-1000 ஆண்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் – எக்காலத்திலும் அழியாது.

எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சக்கடைகள் ஆகியவைகளில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துர்நாற்றம், கொசுவளர்ப்பு, நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன

மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.


மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது

ரெசின் துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், கடல் ஆட்டர், டால்பின், கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில், மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன.

கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு கடலில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் ஒரு லட்சத்து 78 ஆயிரம் டன் கடலும் ஓர் வீடுதான் பல கோடி உயிர்களுக்கு,,,, One lakh 78 thousand tons of garbage is thrown into the sea in India every year and the sea is a home for millions of lives.